ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த ஜே.வி.பி

  Fayasa Fasil
By -
0

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.

எனினும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் போதிலும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சி ஆதரவளிக்காது என ஜே.வி.பி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)