அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான எந்தவொரு போட்டிப் பரீட்சையையும் நடாத்த வேண்டாம் என்று நிதி அமைச்சு பரீட்சை திணைக்களத்திற்கு நேற்றைய தினம் (23) அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஏற்கனவே நடாத்தப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வெளியிட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு வெளியிடப்பட்டால் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. - Siyane News