கடந்த ஒரு மாத காலத்திற்குள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவான மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய 21 மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தற்காலிக வகுப்புத்தடை விதித்துள்ளது.
தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு குறித்த காலப்பகுதியில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அல்லது விடுதிக்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.