ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நம்புவதாக இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 பேர் தெரிவித்துள்ளனர்.
