(சியாத்.எம்.இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான நியமனமும் சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பொறுப்பான பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரீ.எம்.சியாத் வழிகாட்டலில் அதிபர் ஏ.சீ.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை உறுதிப்படுத்துமுகமாகவும் மாணவர்களிடத்தில் மனப்பாங்கு விருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலும் பாடசாலையின் ஒழுக்காற்றுக்குழு தெரிவு செய்த சுமார் 72 மாணவத்தலைவர்களுக் இதன்போது நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பி.விஜயதுங்க, போக்குவரத்து பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி கே.டி.ஏ.திலகசிரி, இணைப்பாடவிதானத்துக்குப் பொறுப்பான உதவி அதிபர் ஏ.ஆர்.எம். ஆசிக், ஒழுக்காற்றுக்குழு செயலாளர் ஏ.எல். முஹமட் இல்யாஸ், உயர்தர வலய மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கல்வியின் திறவுகோளாக ஒழுக்கமே காணப்படுகின்றது. அதன் நிமிர்த்தம் பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் பாடசாலை ஒழுக்காற்று குழுவினாலும் செயற்படுத்தப்பட்ட இந்நிகழ்வில், மாணவத் தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அவர்களுக்கான நியமனமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் நடைபெற்ற இந்நிகழ்வானது, பாடசாலையின் கலை கலாசார விழுமியங்களை பறைசாற்றுவதாகவும், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன மகிழ்வையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.