ஞானசார தேரரின் “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி அறிக்கையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்தார்.
நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போது “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி தொடர்பில் ரவுப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
