முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த மாதம் 24ம் திகதி வருகைத் தர திட்டமிட்டிருந்த போதிலும், தான் அது குறித்து வெளியிட்ட கருத்து காரணமாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஸவின் வருகை பிற்போடப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
நுகேகொடை – மிரிஹான பகுதியிலுள்ள தமது வீட்டில் தங்குவதே, கோட்டாபய ராஜபக்ஸவின் மனைவியுடைய கோரிக்கை என கூறிய அவர், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகப்பூர்வ வீடொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.