இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (ஆண்)

Rihmy Hakeem
By -
0

 

- ஐ.ஏ. காதிர் கான்-

( மினுவாங்கொடை நிருபர் )

   மாதம்பை -  இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

   அல் - குர்ஆனை அழகிய முறையில் (தஜ்வீத் முறைப்படி) பார்த்து ஓதக்கூடிய அத்துடன், கடந்த 2021 ஆம் ஆண்டு மற்றும் இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஆண் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

   இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள்  விண்ணப்பிக்கும் போது, மாணவர்களின் தரம் 10 மற்றும் தரம் 11ற்குரிய  முன்னேற்ற அறிக்கைகள், பெறுபேறுகளுக்கு பதிலாக ஏற்றுக் கொள்ளப்படும் என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   பதிவுகளுக்கு, https://forms.gle/wVjeHRPgznCdHBVh7 எனும் Google Form ஐ பூரணம் படுத்துவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும். அல்லது, நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் தருவதன் மூலம்,  விண்ணப்பங்களை நேரடியாகச் சமர்ப்பிக்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   புதிய ஆண் மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை, ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல், மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில்  இடம்பெறவுள்ளது.

   நேர்முகப் பரீட்சைக்குத்  தோற்றும் போது, மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ் (மூலப் பிரதி), தேசிய அடையாள அட்டை, 2022 ஆம் ஆண்டு தரம் 10, 11 ஆகியவற்றின் முன்னேற்ற அறிக்கைகள், 2021 ஆம் ஆண்டு பெறுபேறுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் எவையாவது இருப்பின் அவற்றையும் சமர்ப்பித்தல் அவசியமாகும்.  

   மேலதிக விபரங்களை, 

077 264 9152, 

032 224 7786

ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ அல்லது

077 550 4740

076 701 5013

எனும் வாட்ஸ்அப் இலக்கங்களுடனோ தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

   பின்வரும் பாட நெறிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

   1. DIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES (COMMERCE STREAM) 

– (மூன்று வருடம்)

   2. LICENTIATE IN ARABIC & ISLAMIC STUDIES (ARTS STREAM) 

– (ஐந்து வருடம்)

   ஐந்து வருடங்களைக் கொண்ட LICENTIATE COURSE IN ARABIC கற்கை நெறியில் அல் - குர்ஆன், அல் - ஹதீஸ், உயர் தர ஷரீஆ, உயர் தர அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில் நுட்பம், தேர்வுப் பாடங்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.

   க.பொ.த (உ/த) பரீட்சை கலைத் துறையில் பின்வரும் பாடங்களைத் தெரிவு செய்ய முடியும்.

1. Arabic Language 

2. Islamic Civilization

3. Political Science 

4. ICT 

5. Economics

   அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் கலைமாணி பட்டப் பரீட்சை (வெளிவாரி)  மாணவர்கள் தயார் படுத்தப்படுவார்கள்.

   இதற்கு மேலதிகமாக,  திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்கள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகளும்  மேற்கொள்ளப்படும். 

   அத்துடன், துறை சார் கற்கை நெறிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

இலங்கை பல்கலைக் கழகங்கள் (வெளி வாரி கற்கை) தாம் விரும்பிய கற்கை நெறிகளை வெளி வாரியாக சனி, ஞாயிறு தினங்களில் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படும்.

   இதேவேளை,

கல்லூரியின் மற்றொரு பிரிவாக இயங்கும் மூன்று வருடங்களைக் கொண்ட DIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES வர்த்தகத் துறை கற்கை நெறியும் இங்கு போதிக்கப்படும்.

   இதில் அல் - குர்ஆன், 

அல் - ஹதீஸ், அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில் நுட்பம், தலைமைத்துவ கற்கை நெறி போன்ற பாடங்களுடன் க.பொ.த. 

(உ/த) பரீட்சை வர்த்தகத் துறையில் பின்வரும் பாடங்களை மாணவர்களுக்குத் தெரிவு செய்ய முடியும்.

1. Accounting 

2. Economics 

3. Business Studies 

4. ICT

   ஆழமான இஸ்லாமிய அறிவும்,  ஆன்மிகப் பண்புகளும் துறை சார்ந்த அறிவு மற்றும் திறமைகளும் கொண்ட சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள், திட்ட முகாமையாளர்கள், ஊர் மட்டத் தலைவர்கள், வழி காட்டிகள், சமூக ஆய்வாளர்கள் போன்றோரை உருவாக்கும் பணியில், கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


( I. A. Cadir Khan )

11/08/2022.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)