போராட்டத்தின் தீவிர உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பெத்தும் கேர்னரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
நீதிமன்றில் ஆஜராகத் தவறிய காரணத்தினால், கைது செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான பெத்தும் கேர்னர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.