அடுத்த ஒலிம்பிக். மற்றும் பராலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவும் மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் விளையாட்டு விழாவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ சின்னங்களை, பாரிஸ் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற வைபவத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டது.
பிரிஜியன் கெப் (Phrygian cap) எனும் பழங்கால தொப்பிகளின் அடிப்படையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிழக்கு ஐரோப்பா, பாரசீகம் முதலான பிராந்தியங்களில் பழங்கால மக்கள் அணிந்த தொப்பி இது.
விடுதலை, சுதந்திரம், பிரெஞ்ச் புரட்சியின் அடையாளமாக சிவப்பு நிற 'பிரீஜ்' சின்னம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் பிரிஜியன் தொப்பி பிரசித்தி பெற்றதாகும். அந்நாட்டின் தபால்முத்திரைகளிலும் இத்தொப்பி அச்சிடப்பட்டிருந்தது.