தேசிய உதைப்பந்தாட்டணிக்கு தெரிவு செய்யப்பட்ட அல் ஹிக்மா மாணவனுக்கு பழைய மாணவர் சங்கத்தினால் பாராட்டு _புதிய ஜேர்சியும் அறிமுகம்_

  Fayasa Fasil
By -
0

கொழும்பு 12, வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை) யின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில்  கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் இன்று  ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு கல்லூரியின் பழைய மாணவர் சங்க அலுவலகத்தில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமான மஹ்சூர் முஸ்தபா மற்றும் பழைய மாணவர் சங்க உப தலைவர் எச்.எம்.எச்.இஸ்மத் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.

தலைமையுரையை கல்லூரி அதிபர் மஹ்சூர் முஸ்தபா நிகழ்த்தினார்.
வரவேற்பு மற்றும் அறிமுக உரையை பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளரும் ஊடகவியலாளருமான ஸாதிக் ஷிஹான்  நிகழ்த்தினார்.

குறிப்பாக கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணியிலிருந்து  தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவன் பாத்திஹ் பாசில் மற்றும் அவரது உதைபந்தாட்ட அணியும் இதன்போது பாராட்டி கெளரவிக்கப்பட்டது.

இதன்போது தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவன் பாத்திஹ் பாசிலுக்கு பழைய மாணவர் சங்கத்தினால் பெறுமதியான பரிசும் வழங்கப்பட்டது.

அத்துடன் பழைய மாணவர் சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட உதைபந்தாட்ட அணிக்கான ரீ சேட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு உதைபந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அல் மஸ்ஜிதுகள் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரும் பழைய மாணவருமான எச் எம் அம்ஜடீன், தொழிலதிபர்களான நிஸ்வான் ஆசிரியர், மொஹம்மத் ஸபர், சப்பார் ரெய்னுடீன் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்தனர்.

பழைய மாணவர் சங்கத்தின் உப செயலாளரும்  தேசிய அணியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற விளையாட்டு வீரருமான எம் சபியுடீன் மாணவர்களுக்கான விஷேட அறிவுரைகளை வழங்கினார்.

பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவரான எம் எஸ் எம் புஹாத், பொருளாளர் அஸ்ரின் ஹனீபா, செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம் எஸ் எம் ஹஸன் பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டு குழு இணைப்பாளர் எம் எப் எம் முனாஜி, உதைப்பந்தாட்ட குழு பயிற்றுவிப்பாளர் ஜனாப் எம் அஸீஸ் உட்பட கல்லூரியின் முகாமைத்துவ பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் ஆஸாத் அப்துல் முயீத்,  டாக்டர் நஸீஹா அமீன், பழைய மாணவர் சங்கம் பிரதிநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)