அன்பு கொண்டேன் உன்னில்
உள்ளம் நிலைத்தேன் தன்னில்
நட்பை கண்டேன் உன்னில்
உண்மை உணர்ந்தேன் தன்னில்
பாசம் கொண்டேன் உன்னில்
நேசம் உணர்ந்தேன் நம்மில்
காயம் கண்டிட்ட
மனதில்
ஆறுதல் கொண்டிட்டேன் உன்னில்
புரிந்த நட்பிலே பிரிவுமேது
உண்மை அன்பு மறைவதேது
புரியா நட்பும் நிலைப்பதேது
புரிந்த அன்பும் மடிவதுதமேது
காலமது மலரும் வரை
மலர்களது மடியும் வரை
வாழும் நம் நட்பு அதுவரை...
சப்னா சகூர்
கஹட்டோவிட்ட