மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

TestingRikas
By -
0
மஹவ உக்வத்தேகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மெதகம பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடையவராவார்.

குறித்த நபர் உக்வத்தேகம பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையல்,, நாய்கள் பண்ணைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)