சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று (23) காலை களுத்துறை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.
இதன் காரணமாக கடலோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, கடற்படை முகாமிற்கு முன்பாக ரயில் தடம்புரண்டுள்ளது.
அதன்படி தற்போது கரையோர ரயில் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default