கஞ்சா சம்பவம் - எத்திமலை OIC பணி நீக்கம்

TestingRikas
By -
0
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து சுமார் 650 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஜனவரி 13 ஆம் திகதி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)