கண்ணீர்சிவப்பாய் வடியும் நேரம் - வைரமுத்து

  Fayasa Fasil
By -
0
துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டது

ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன

வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன

மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன

மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்

உலக நாடுகள்
ஓடி வரட்டும்

கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்



வைரமுத்து 
#TurkeyEarthquake

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)