கலாநிதி மன்சூர் அல் ஜபாரா நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸலலை சந்தித்து கலந்துரையாடல்

TestingRikas
By -
0
கலாநிதி  மன்சூர் அல் ஜபாரா நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸலலை சந்தித்து கலந்துரையாடல்

குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் கலாநிதி  மன்சூர் அல் ஜபாரா நல்லிணக்க அடிப்படையில் நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸலலை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இருநாடுகளின் உறவை பேனும் வகையில் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கையில் உள்ள குவைத் தூதுவராயத்துடன் தொடர்புகளை மேற் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனவும் கலாநிதி  மன்சூர் அல் ஜபாரா  கேட்டுக் கொண்டார். அத்துடன் நோன்பு மற்றும் ஹஜ் காலங்களில் தமது சமுக அமைப்புக்களினூடாக உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை முஸ்லிம் சமுகம் தமது நல்ல செயற்பாடுகள் மூலம் ஏனைய சமுகங்ளின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது பணிப்பாளர் கலாநிதி மன்சூர் அல் ஜபாராவுக்கும் அவருடன் வருகை தந்த இஸ்ஹானி அப்பாசிக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். இதன்போது உதவிப்பணிப்பாளர் அன்வர் அலி உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)