நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக திட்டமிட்ட மின் வெட்டுக்கள் இடம்பெறலாம்

  Fayasa Fasil
By -
0

மின்சார விநியோகம், மின் கட்டணம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மின்சார விநியோகத்தை துண்டிப்பு இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக திட்டமிட்ட மின் வெட்டுக்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகின்றது.

எவ்வாறெனினும் திட்டமிட்ட மின்வெட்டு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)