இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமித்த இந்தியா!

TestingRikas
By -
0

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை இந்தியா நியமித்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக பணியாற்றி வருகின்றார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா விரைவில் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)