தொடர்ந்தும் இவ்வருடமும் விமர்சையாக இடம்பெற்ற கஹட்டோவிட்ட YMMA ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இலவச அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (படங்கள்)

Rihmy Hakeem
By -
0



​பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டிற்காக, சமூக சேவகரும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமாகிய அல்-ஹாஜ் பிர்தௌஸ் அவர்களினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் "மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தின்" மற்றுமொரு கட்டம் அண்மையில் (ஜனவரி 31) கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.


அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் (YMMA) கஹட்டோவிட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, சர்வமத நல்லிணக்கத்தையும் மாணவர் நலனையும் முன்னிறுத்தி மிக விமரிசையாக இடம்பெற்றது.


​நிகழ்வில் ​நிட்டம்புவ வித்யானந்த பிரிவெனாவின் விகாராதிபதி, கௌரவத்துக்குரிய கால்லே தம்மின்த தேரர் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு. எம்.எம். முஹம்மத், கம்பஹா மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி ருவந்தி பெர்னாண்டோ, கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு. சமீர ஜயவர்தன மற்றும் ஊடகவியலாளர் திரு. கயான் சம்பத் (சிரச  தொலைக்காட்சி) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.


மாணவர்களுக்கான புத்தகங்களுக்கு மேலதிகமாக, பாடசாலையின் உட்கட்டமைப்புத் தேவையை கருத்திற்கொண்டு, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். அஸ்மிர் அவர்களிடம் பாடசாலைக்குத் தேவையான LED மின்குமிழ்கள் (LED Bulbs) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.


​அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு. சுகத் அவர்கள் முழு நிகழ்வையும் மிகவும் நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுத்து வழங்கினார்.

​அல்-ஹாஜ் பிர்தௌஸின் இத்தகைய தொடர்ச்சியான சமூகப் பணிகள் மற்றும். அவர் தலைமையிலான கஹட்டோவிட்ட YMMA இன் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் பிரதேசத்தில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல் 














கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)