ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத் தலைப் பிறைத் தொடர்பிலான ஒரு விஷேட கூட்டம் கடந்த 2026.03.05 ஆம் தேதி வியாழக்கிழமை ஹிஜ்ரி 1447 ரமழான் பிறை 15 அன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலைவர் அல் உஸ்தாத் அல் ஆலிம் எம்.பி.எம். ஹிஷாம் (அல் ஃபத்தாஹி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் உட்பட, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் குழு உலமாக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத் தலைப் பிறை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பின்வரும் தீர்மானங்களும் பெறப்பட்டன:
வழமைப்போன்று, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலைவரின் தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து ஷவ்வால் பிறைத் தொடர்பாக ஏகமனதாக எடுக்கும் இறுதித் தீர்மானம் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினமாக கொள்ளப்பட்டு அதன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை மாநாட்டின் தலைவரினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் நேரலை உட்பட அன்றைய தினம் மாநாட்டில் பங்கேற்கும் அனுமதியளிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக இன்ஷா அல்லாஹ் அறிவிக்கப்படும்.
அதனடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலிலிருந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை மாநாட்டின் தலைவரினால் அறிவிக்கப்படும் இவ் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை கவனத்தில் கொள்ளுமாறும் அவ் உத்தியோகப்பூர்வ அல்லாத ஏனைய செய்திகள் விடயத்தில் மிகுந்த அவதானமாக செயல்படுமாறும் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

