தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர், உதவி இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர், காரியாலய உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அலுவலகங்களில் இடம்பெற்று வருகிறது.
இன்றைய தினமும் (21) நாடளாவிய ரீதியில் நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற்றதுடன், விண்ணப்பதாரிகளின் கல்விச்சான்றிதழ்கள் பரிசீலிக்கப்பட்டன.
![]() |
| இன்று (21) கம்பஹா மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைக்காக தமது விபரங்களை பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் |
மேலும் ஆரம்ப நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் இறுதி நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கானோர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் வெகு சொற்பமான எண்ணிக்கையிலான வெற்றிடங்களே நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

