கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய விஞ்ஞான கூட அபிவிருத்திக்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!

Rihmy Hakeem
By -
0


கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பாடசாலை விஞ்ஞான கூட அபிவிருத்திக்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பாடசாலையின் அடிப்படைத் தேவைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, மேலும் பல கட்டிடப் புனரமைப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் இன்ஷாப் தெரிவித்தார்.


இந்த அபிவிருத்திப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கலந்தாலோசனை செய்வதற்கான பிரத்தியேகக் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம, அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்ஷாப், கஹட்டோவிட்ட வட்டார சபை தலைவர் ஜவாத் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகக் குழுவினருடன் கலந்துரையாடினர்.


இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் கஹட்டோவிட்ட அல் பத்ரியா பாடசாலை மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே, வாசிகசாலை மறுசீரமைப்புக்காக 20 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)