மலேஷியா சென்று பதக்கங்களுடன் நாடு திரும்பிய கஹட்டோவிட்ட முஆய் தாய் வெற்றி வீரர்களுக்கு வழங்கப்பட்ட மகத்தான வாகன பேரணியுடனான வரவேற்பும் பரிசளிப்பு நிகழ்வும் (படங்கள்)

Rihmy Hakeem
By -
0



கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் இருந்து மொஹம்மத் ஸாதாத் மற்றும் மொஹம்மத் நுஸைர்  மாணவர்களும் , சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் கஹட்டோவிட்டாவை சேர்ந்த மொஹம்மத் மிசாரி ஆகிய மூவரும் இம்முறை மலேஷியாவில் நடைபெற்ற முஅய்தாய் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்ற 42 வீரர்களுள் கஹட்டோவிட்டவை பிரதிநிதித்துவம் செய்த இளம் வீரர்களாகும் , இவர்களுடன் பயிற்றுவிப்பாளர் முழுத் இப்திகார் அவர்களும் இந்த போட்டிகளுக்கு மாணவர்களை வழிநடாத்துவதற்காக இலங்கை முஆய்தாய் சம்மேளனத்துடன் இணைந்து சென்றிருந்தார். 


கஹட்டோவிட்டவில் இருந்து சென்ற மூன்று இளம் வீரர்களில் முஅய்தாய் குத்துச்சண்டை போட்டியில் மிகவும் திறமையாகவும் , அபாரமாகவும் போட்டியிட்டு பல நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் மோதி சம்பியனாகியதுடன் மொஹம்மத் ஸாதாத் மற்றும் மொஹம்மத் நுவைர் இப்போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றதோடு மொஹம்மத் மிசாரி வைகுரு எனும் போட்டிகயில் பங்கு பற்றி வெண்கலப்பதக்கத்தை வெற்றி கொண்டு  பாடசாலைக்கும் ,ஊருக்கும் ,நாட்டுக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.


இவர்களை வரவேற்கும் முகமாக கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகாவித்தியாலயம் மற்றும் கஹட்டோவிட்ட விளையாட்டு கழகங்களும் ,விளையாட்டு ஆர்வலர்களும் ,கஹட்டோவிட்ட KPL கிரிக்கெட் சம்மேளனமும் பல் வேறு வகையிலும் இவர்கள் நாடு திரும்பும் தினமும் கடந்த 4/7/2026 சனிக்கிழமையும்  மேற்கொள்ளப்பட்டன.


கடந்த சனிக்கிழமை அதாவது நேற்றைய தினம் இவர்களை வரவேற்று ,பாராட்டும் முகமாக வாகன பேரணி நிகழ்வு ஒன்றையும் கஹட்டோவிட்டாவின் விளையாட்டு ஆர்வலர்கள் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது..


இந்த வாகன பேரணிகள் கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி முன்னால் ஆரம்பிக்கப்பட்டு ,உனகஹதெனிய, நிட்டம்புவ, திஹாரிய, உடுகொடை, ஓகடபொல ஊடாக கஹட்டோவிட்ட பிரதான சந்திவரை வந்தடைந்தது.


இந்த வாகன பேரணியின் போது வெற்றி வாகை சூடிய மூன்று வீரர்களுக்கும் ,பயிற்றுவிப்பாளர் முழுத் இப்திகார் அவர்களுக்கும் மகத்தான பாராட்டுக்களை மக்கள் தெரிவித்தனர்.மேலும் திஹாரியிலும் ,இவர்களை வாழ்த்தி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றதோடு உடுகொடையிலும் ஜின்னா விளையாட்டு கழகத்தினர் நினைவுச்சின்னங்கள் வழங்கி  வீரர்களையும் பயிற்றுவிப்பாளரையும் கௌரவித்தனர்.


இறுதியாக கஹட்டோவிட்ட பிரதான சந்திக்கு வாகன பேரணி வந்தடைந்ததுடன் அங்கிருந்து பாடசாலை அதிபர் கௌரவ எம் ஏ.எம் அஸ்மிர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ,கஹட்டோவிட்ட 369 கிராம் சேவகர் திரு .பிரதீப் மற்றும் 369ஏ கிராம திருமதி சுஜானி கிராம  சேவகர்  உள்ளிட்ட மற்றும் பல முக்கியஸ்தர்களும் ஊர்ப்பொதுமக்களும்,விளையாட்டு ஆர்வலர்களும் ,கழகங்களின் உறுப்பினர்களும் ,பெற்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


கஹட்டோவிட்ட பிரதான சந்தியில் இருந்து கிராம் உத்தியோகத்தர், பாடசாலை அதிபர் மற்றும் KpL சம்மேளனம் சார்பில் சகோதரர் முபீன் போன்றவர்களால் மூன்று சம்பியன்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் மலர்மாலை அணிவித்து பூங்கொத்து வழங்கி பாடசாலை பாண்ட் வாத்தியக்குழுவின் அணிவகுப்போடு பாடசாலை வரை அழைத்து வரப்பட்டனர்.


இதன் பின்னர் அல் பத்ரியா பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஏ.எம் அஸ்மிர்,கிராம சேவகர் பிரதீப் , சகோதரர் கியாஸ் , பயிற்றுவிப்பாளர் முஆத் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. 


இதன்போது மூன்று சம்பியன்களுக்கானநினைவு சின்னங்களும், பரிசில்களும் பாடசாலை சார்பிலும்   KPL சார்பிலும் வெற்றி வீரர்களுக்கும் , பயிற்றுவிப்பாளருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். 


இந்த நிகழ்வின் பல்வேறு கண்டங்களின் போது பிடிக்கப்பட்ட படங்களை காணலாம்.

கஹட்டோவிட்ட எனும் கிராமம் கல்வித்துறையிலும் ,விளையாட்டு துறையிலும் பல்வேறு சாதனைகள கடந்த காலங்களிலும் அண்மைக்காலமாகவும் நிகழ்த்தி வருவதுடன் முஆய்தாய் எனும் குத்துச்சண்டை போட்டியிலும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தங்கப்பதக்கங்களை வென்றெடுத்து சாதனைகளை நிலைநாட்டி வருவது பாடசாலைக்கும், ஊருக்கும்,நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் அம்சமாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல் 























கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)