கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் கலை, வர்த்தகப் பிரிவுகளுக்கான புதிய மாணவ, மாணவிகள் கடந்த 12.08.2026 புதன்கிழமை இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் இதன்போது விமர்சையாக இடம்பெற்றது. இவ் வரவேற்பு நிகழ்வை தரம் 13 மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் அஸ்மிர் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் Ash. M.T.M. Thawzeer (SLEAS), ஆசிரிய ஆலோசகர் Mr. M.T.M. Zayan மற்றும், நிருவாகத்தினர், ஆசிரியர்கள், SDEC, OBA, OGA, BWA நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

