கம்பஹா மாவட்டம், உடுகொடை அரபா மகா வித்தியாலயத்தின் 2028 புதிய உயர்தர வகுப்பு மாணவர்களை உத்தியோகபூர்வமாக பாடசாலைக்கு உள்வாங்கும் வரவேற்பு நிகழ்வு கடந்த 04. 08. 2026 செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் அஸாம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக கம்பஹா, களனி வலய தமிழ் மொழி மூல பிரதி கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம்.தௌஸீர் கலந்து சிறப்பித்தார்.
மேலும் அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு 2027 உயர்தர மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









