நுவரெலியா மாவட்டத்தில் முதல் தடவையாக சோலத்தில் சேனா கம்பளி புளுக்கள் இருப்பதை ஹட்டன் ருவான்புற பகுதியில் இனங்கானபட்டுள்ளது. 

இந்த சம்பவம் சனிக்கிழமை (19) பிரதேச மக்களால் இனங்கானபட்டுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர். 

ஹட்டன் ருவன் புறபகுதியில் உள்ள மக்கள் தேயிலை, மரக்கரி போன்ற விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த பகுயிதியில் சோளத்தின் விதையில் புளுக்களின் முட்டைகள் பிரதேசமக்களால் இனங்காணபட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளர். 

இதுபோன்ற புளுக்கள் பரவினால் தேயிலை மற்றும் விவசாய பயிர்செய்கைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வாறான ஒரு நிலமை தொடருமானால் தமது நாளாந்த பயிர்செய்கை தொழிலை மேற்கொள்ள முடியாமல் நேரிடும் எனவும் ருவன்புற பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இதேவேளை குறித்த பகுதியில் காணபட்ட சோள பயிர்களை பிரதேச மக்கள் தீயிட்டு கொழுத்தியுள்மை குறிப்பிடதக்கது. 

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.