பெருக்கமரம் பாவோபாப் மரம் என்று சர்வதேச நாடுகளில் அழைக்கப்படுகிறது. பாவோபாப் மரத்தின் இலையை ஓட்டங்கள் சாப்பிடுகின்றன. அரேபியாவிலும் ஆப்ரிக்காவின் சஹாராவிலும் பாவோபாப் மரங்களை அவதானிக்கலாம்.

போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முஸ்லிங்களின் வர்த்தகங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டன. ஆனால் முற்று முழுதாக கடல் வர்த்தகத்தை அழிக்க முடியவில்லை. கி.பி 1630 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி போர்த்துக்கேயருக்கும் இரண்டாம் ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் மெனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பகுதியில் யுத்தம் இடம்பெற்றது. இதில் இலங்கை முஸ்லிம்களும் அரபிகளும் ஓட்டகத்தில் ஏறி போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இந்தப் படை ஒட்டு பலகாய ඔටු බලකාය (ஒட்டகப் படையணி) என்று அழைக்கப்பட்டது.

வெல்லவாய யுத்த்தில் முஸ்லிங்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நுவரெலிய ஹங்குராங்கெத்த தேவாலயத்தின் சுவரில் முஸ்லிங்களின் ஒட்டகப் படையை சித்தரிக்கும் வகையில் ஒரு சித்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த ஒட்டகப்படையினரே போர்த்துகேயருக்கு எதிராகப் போராடினார்கள். இவர்கள் அரேபியாவில் இருந்து ஒட்டகங்களை மன்னார் துறைமுகத்திற்கு எடுத்துவந்ததாகவும்  இதன் போது பெருக்கமரம் எனப்படும் ஒட்டகங்கள் சாப்பிடும் baobab என்ற மரத்தை மன்னார் நகரில் நாட்டினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹென்ரி கொரயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

படம்: மன்னாரில் உள்ள பெருக்க மரம்

தொகுப்பு பஸ்ஹான் நவாஸ்
செய்தியாசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.