அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது  மனதில் ஆழமாக பதிய வேண்டிய நபிமொழி

நான்கு விடயங்கள் உன்னிடத்தில் இருந்தால் நீ உலகில் எதை இழந்தாலும் கவலை கிடையாது

1. பேச்சில் உண்மை
2.அமானிதம் 
    பேணல்
3.நற்குணம்
4.உணவில் 
    பத்தினி தனம்

சந்தர்ப்பங்கள் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பெரும் பாக்கியம். குறிப்பாக சந்தர்ப்பங்கள் பெரும்பாலும் வாலிபப் பருவத்தில் தான்  கிடைக்கும். காரணம்
வாலிபப் பருவம், இது உடல் வலிமையும் வீரியமும் (physical strength and energy) கொண்ட பருவமாகும்.  வாழ்வில் தன் வாலிபத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்வை அடைய சாத்தியமற்றவன்.

இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிமொழி வழிகாட்டி நிற்கின்றது.

இளமை பருவத்தில் தனது திறமையை இனம் காண்டு,விடா முயற்சி செய்த ஒரு நபரை எடுத்து காட்டுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

கஹட்டோவிட கிராமத்தில் பிறந்து பல பதவிகளை வகித்து தற்போது தேர்தல் ஆணையளராக பதவியேற்றுள்ள அஷ் ஷேய்க் முஹம்மத் (நளீமி) அவர்கள்.
இந்த உயரத்திற்கு ஏறிச் சென்ற படிகளை புத்தகங்கள் என கருத்தில் கொண்டு அவருடைய முன்னேற்ற அனுபவங்களை, இளம் பருவத்தில் இருப்போர் சென்றறிவதில் பலன் உண்டு.

ஒரு நாள் அவருடன் பயணிக்கும் போது நான்  அவரிடத்தில் கேட்டேன் "sir படிக்கும் காலத்தில் நீங்கள் எவ்வாறான சோதனைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது?" அதற்கு அவர் ஒன்றை மட்டும் கூறுகிறேன் என்று "எங்களுக்கு சாப்பாடு கொடுக்க எனது தாய் வல்கம்முல்லைக்கு நடந்து சென்று மையொக்கா (மரவள்ளி) வாங்கி வருவார்கள்.  பாண் வாங்க சல்லி இல்லை" என்றார்.
உண்மையில் இஸ்லாத்துக்காகவும், நாட்டுக்காகவும் அயராது உழைக்கும் எண்ணம் கொண்ட  குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று நினைத்து முயற்சிக்கும் பெற்றோர்களின் முயற்சிகளை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

அவர்களுடைய பெற்றோரை கபூல் செய்து கொள்வானாக...

Ash Sheikh Salman usama (Ridhwani)
Kahatowita - sarlanka

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.