சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியா!


இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தியா மற்றும் ஆஸி. அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸி. அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தமதாக்கிக் கொண்டது.

இந்திய மண்ணில் அண்மையில் இந்தியா அடைந்த மோசமான தோல்வியாகவே இத்தோல்வி நோக்கப்படுகிறது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கோலியின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய ஆஸி. அணி இரண்டு பந்துகள் மிதமிருக்க கிளன் மேக்ஸ்வெலின் வேகமான சதத்தின் துணையுடன் போட்டியில் வெற்றி பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரனாகவும் தொடராட்ட நாயகனாகவும் துடுப்பால் தனது திறமையினை வெளிக்காட்டிய மேக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here