பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லாம் மாண்டு போனதாக கூற மோடி என்ன விஜயகாந்த்தா?


" மாமி இங்க வாங்கோ, அத்திம்பேர் எங்கே போறேள்! இப்படி உட்காருங்கோ... பாகிஸ்தானுக்கு நம்ம ராணுவம் தாக்குதல் நடத்திச்சோல்லியோ? ஸ்வீட் எடுத்துக்கோங்கோ.. வெற்றி! வெற்றி!...ஜெய் ஹிந்த்"..என்கிறார்கள் ஒரு சாரார்...

 பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் தீவிரவாதிகள் எல்லாம் மாண்டு போய்விட்டதாகவும் கூறுகின்றன இந்திய ஊடகங்கள்.ரமணா விஜய் காந்த் ஸ்டைலில் கண்கள் சிவக்க இந்த எண்ணிக்கையை 300 என்று வாசித்துக் கொள்ளவும்.மணிரத்தினத்தின் ரோஜா க்ளைமேக்ஸ் போல இத்தனை சீக்கிரத்தில் ' எப்படிப்பா யாவும் சுபம் ' ஆகும் ?  எல்லாம் கொன்றொழிக்க மோடி என்ன விஜய் காந்தா ? அர்ஜுனா ?

 இந்தியா ஆங்கில ஊடகங்களில் தீபாவாளி, நடந்து கொண்டு இருக்க இம்ரான் கானோ பாகிஸ்தானோ தமது நாட்டுக்குள் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என்கிறார்கள்.அல்ஜெஸீரா ஏதோ ஒரு பள்ளத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.குண்டுகள் போடப்பட்டதாகச் சொல்லப்படும் பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதி விவசாயி ஒருவர் பீபீஸிக்கு பேட்டி அளிக்கையில் " அதிகாலை பயங்கர சத்தம் கேட்டதாகவும் போய்ப் பார்த்தால் நாலைந்து வீடுகள் சேதமடைந்து கிடந்ததாகவும் ஒருவர் காயமடைந்து இருப்பதாகவும் சொன்னார்..ஆக மொத்தத்தில் இது இயக்குநர் முருகதாஸ் கதையா இன்னொருவரின் கதையா யார் சொல்வது உண்மை என்று தெளிவில்லை...

மே மாதத்தில் மோடி நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டும்.இப்படியான போர் கோலங்கள் டெமேஜாகி இருக்கும் தனது இமேஜை அந்தரத்தில் தூக்கி நிறுத்தும் என்று நினைக்கிறார் மோடி...மோடியின் அத்தனை அடைவுகளையும் பன்மைத்துவத்திற்கு முரணான ஒற்றை அரசியல் சித்தாந்தங்களையும் பார்க்கும் போது அவர் ஒரு இந்திய ராஜபக்சவாய்த் தெரிகிறார்.

ராஜபக்ச யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் மாகாண சபை தேர்தல்களை நடத்தியது ஞாபகம் வருகிறது.வடக்கில் எங்காவது ஓரிடத்தைக் கைப் பற்றிவிட்டு நெஞ்சில் டமார் என்று அடித்து தேர்தல் வைப்பார்..ஒட்டுமொத்த கெபினட்டும் அங்கே முகாமிடும்.பின்னர் இன்னொரு இடத்தைக் கைப்பற்றுவார்.யுத்தத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு மாகாணத்தில் தேர்தல் வரும்.மக்களிடம் விற்பதற்கு யுத்தம் இருந்தது..யுத்தம் ஆட்சியாளர்களுக்கு நல்லதொரு இன்வெஸ்ட்மெண்ட்..

யுத்தம் எல்லாம் முடிந்த பிறகு ' தன்னை போர்க்குற்றவாளியாக்கி தூக்குத் தண்டனை தரப் போகிறார்கள் ' என்று சொல்லி சொல்லியே தேர்தல் மேடைகளில் புலம்பினார்..இப்படியே தனது இரண்டாவது இனிங்ஸை நிறைவு செய்தார்...இதையே தான் மோடி அப்படியே செய்கிறார்..உள் நாட்டு  மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம்கள் தான் மோடிக்கு தீட்டு..ஆனால் சவூதி இளவரசர் சல்மானை மும்தாஜ் மாதிரி கண்டபடி கட்டிப் பிடிக்கிறார்..ராஜபக்சவை மிஞ்சிய அரசியல்வாதி மோடி....மோடியை ஆசை தீர யாராவது ராக்கிங் செய்ய வேண்டும்.

(Zafar Ahmed)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here