சேர்! ஊத்த அல்லும் தொழில் மோசமானதா? - உண்மை சம்பவம்

#மனதை_தைத்த_கேள்வி..
உண்மை நிகழ்வுவகுப்பறையில் ஸலாம், Good morning என்று கூறியவனாக நுழைந்தேன்.

ஒரு Student (ஸ்டுடன்) சேர் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?! என்றார்.
சரி கேளுங்க தெரிந்தால்/முடியுமாயின் பதில் கூறுகிறேன்  இல்லாவிட்டால் நாளை இன்ஷா அல்லாஹ் தேடிச் சொல்கிறேன் என்றேன்.

சேர்!
#ஊத்த_அல்லும்_தொழில்_மோசமானதா?! கேள்வியின் பின்புலத்தை நன்கு உணர்ந்து கொண்டு.

ஒவ்வொருவரினது பெற்றோரின்  தொழில்களையும் விசாரித்து. அதற்கான பெறுமானத்தையும் முக்கியத்துவத்தையும் விளங்கப்படுத்திய ஒவ்வொன்றுக்குமான ஆங்கிலச் சொற்களை வெண்பலகையில் எழுதினேன்.

பின்னர், அவர்கள் ஒவ்வொருவரும் இந்த சூழலை எவ்வாறு அழுக்காக மாற்றுகின்றனர்,  என விளங்கப்படுத்தியதோடு நம்மில் அதிகமானவர்கள் சுய நலம் கொண்டவர்களாக வாழ்கிறார்கள் போன்ற விடயங்களை சற்று விளக்கினேன்.
எல்லாத் தொழிலும் நல்ல தொழில் என்பதையும் உலகம் இயங்க அனைவரும் அவசியம் என்பதையும் விளங்கப்படுத்தி...

 #ஊத்தை_அல்லும் மனிதன் இந்த சமூகத்தின் ஆரோக்கியத்திற்காகவும், சூழலை அழகாகவும் தூய்மையாகவும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் வேலை செய்பவர்கள். அப்படியான மனிதர்கள் உலகில் மிக மிகக் குறைவு.

ஊத்தை அல்லுபவருக்கு நம்மில் பல சொற்கள் சொல்லப்பட்டாலும். மனதில் ஒரு புதிய ஆங்கிலச் சொல் உதித்தது அதனை வெண்பலகையில் " Health Care Officer" #சுகாதார_கண்காணிப்பு_உத்தியோகத்தர், என எழுதினேன்.

இவ்வாறு அவர்களுக்கு தொழில் பற்றியதான கீழ்த்தரமான எண்ணங்கள் தோன்ற காரணம் ;
தொழிலுக்காக வழங்கப்படும் சொற்கள் கெளரவம் கொண்டதாக இல்லாமை,
அழைக்கப்படும் சொற்கள்
வழங்கப்படும் ஆடை,
அவர்களின் வெளித்தோற்றம்
போன்ற இன்னோரன்னவைகள் எனலாம்.

தொழில்களுக்கான கெளரவ சொற்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.மனிதர்களையும் தொழில்களையும் மதிக்கக் கற்றுக் கொடுப்போம்.

A Raheem Akbar
2019/02/18
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here