"எனது உள்ளாடையை தலையில் கட்டி பகிடிவதை செய்தார்கள்.
அம்மா..! என் சாவுக்கு அந்த மிருகங்களை வர அனுமதியாதே!"

(01)
2015.02.18
மேல்வகுப்பு மாணவர்களால் ஆபாச ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தினால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி அமாலி தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய மடலே அது.

(02)
2018.10.08
பகிடிவதை காரணமாக முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பிரதீபன் எனும் மாணவன் மட்டக்களப்பு ஆரையம்பதி கல்வியியற் கல்லூரி விடுதியில் வைத்து தூக்கிட்டுத் தற்கொலை.

(03)
2019.01.23 பகிடிவதை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது.

(04)
2019.02.15 பகிடிவதையில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாயப்பிரிவு மாணவ, மாணவிகள் 54 பேருக்கு ஒரு வார வகுப்புத் தடை.

(05)
2019.02.21 பகிடிவதை சம்பவமொன்றின் காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

(06)
2018.06.23 பகிடிவதை குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகப் பிரிவு இரண்டாம் வருட மாணவர்கள் 180 பேருக்கு பல்கலைக்கழகம் நுழையத் தடை.

(07)
2017.02.19
விவவசாயப் பீட புதிய மாணவர்கள் 8 பேரை நிர்வாணப்படுத்தி பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் கைது.

(08)
2017.04.24 காட்டுக்குள் அழைத்துச் சென்று மண்ணை உண்ண வைத்து வாயை நிலத்தில் உரச வைத்த குற்றச்சாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேருக்கு வகுப்புத் தடை.

(09)
2017.04.11
புதிய மாணவர்கள் உள்ளாடை அணிய தடை விதித்த குற்றச்சாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழக 18 மாணவியர் உட்பட மொத்தம் 28 மாணவர்கள் இடைநிறுத்தம்.

(10)
2016.05.18
பகிடிவதை குற்றச்சாட்டில் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் கைது.
2017 ம் ஆண்டில் பகிடிவதை தொடர்பில் 280 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2018 ம் ஆண்டு கணக்கின்படி பகிடிவதை காரணமாக இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 1989 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பல்கலைக்கழகத்திலிருந்து இடைவிலகிச் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் Bucketing எனும் கலாச்சாரம் இருக்கிறது. அதாவது Hostel Ragging முடியும் நாளில் மேல்வகுப்பு மாணவர்கள் கீழ்வகுப்பு மாணவர்கள் மீது குறிப்பாய் பெண் மாணவிகள் மீது நீர், உஜாலா, சேற்று நீர் போன்றவற்றை வீசி Enjoy பன்னும் ஒரு System.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகளை ஓடவிட்டு
துரத்தித் துரத்தி சேற்று நீரை அள்ளி வீசும்கா ணொலியைப் பார்த்த போது ஏற்பட்ட கவலை ஒருபுறமிருக்க அதை செய்தவர்கள் முஸ்லிம் ஆண் மாணவர்கள்தான் என்று அறிந்த போது உடம்பெல்லாம் பற்றி எரிகிறது.

பகிடிவதை மூலமே Friendship வளர்கிறதென்று சொல்பவர்கள் தமது உறவுக்காரப் பெண்களை நடு வீதியில் வைத்து நான்கைந்து ஆண்கள் சேற்று நீரை அள்ளி வீசும்போதும் பார்த்துக்கொண்டு பல்லிழிப்பார்களா?
பாதிக்கப்படும் மாணவியின் நிலை? அவளது குடும்பத்தின் நிலை? படிப்பை இடைநிறுத்தி விலகிச் சென்றால் அவளது எதிர்காலம்? அவளை எதிர்பார்த்திருக்கும் சமூகத்தின் எதிர்காலக் கனவு?
கவலை ஒரு புறம்.. கண்ணீர் மறு புறம்..
ஒரு சந்தேகம் வருகிறது. இவை அனைத்தும் மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன்தான் நடைபெறுகிறதா? இல்லை யென்றால், இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும்
மாணவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் கேவலமான மாணவர் ஒன்றியம் எதற்கு?

முஸ்லிம் மாணவிகள் முகமூடியைக் கழற்ற வேண்டுமென்று பிற மத மாணவர்கள் கோஷம் போட்டிருந்தால் இந்நேரம் முஸ்லிம் மஜ்லிஸ் போர்க்கொடி தூக்கி இருக்கும்.
ஆனால் பயிர்களை மேய்ந்தது வேலிதான் எனும்போது என்ன வென்று சொல்வது?

தீர்வு?
1 – 2018.08.17 ருஹுனு பல்கலைக்கழகத்தின்
மருத்துவ பீடத்திற்கான கட்டடமொன்றை திறந்து வைத்தபோது உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ “பகிடிவதை செய்யும் மாணவர் யாராய் இருந்தாலும் கண்ணத்தில் அறையுங்கள்!
அறைந்த மாணவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை
தாம் ஏற்பதாக உத்தரவாதம் அளித்தார்.”

2 – பகிடிவதை தொடர்பில் 011 – 212 3700
என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு
அறிவிக்க முடியும்.(24 மணி நேர சேவை)

3 – 2018.06.09 பகிடிவதையால்
பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாராயினும் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்காக
24 மணிநேர சேவையைக் கொண்ட Anti Ragging App இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை.

4 – 1998 (20ம் ஷரத்து) பகிடிவதை குற்றப்பிரிவில்
குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்கள்களுக்கு 10 வருட சிறை தண்டனை.
” சமூகம் குற்றங்களை தயாரித்து வைக்கிறது,
குற்றவாளிகள் அவற்றை செய்து முடிக்கின்றனர் “

(சேர்.வின்ஷ்டன் சேர்ச்சில்)
ஸஜீத் ஜஃபர் ஸாதிக் (ஜாமிஆ நளீமிய்யா)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.