இலங்கை உயர் தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்படும் 4 வருடங்களைக் கொண்ட கற்கை நெறியான “ உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா” (Higher National Diploma in Accountancy - HNDA) பாடநெறியும் அதற்கு இலங்கை அரசில் காணப்படும் வேலை வாய்ப்பும் கடந்த 5 வருடங்களாக இழுபறி நிலையிலேயே செல்கிறது.

இறுதியாக 2014 ம் ஆண்டில் மேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களிலும் இதற்கு பட்டதாரி ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

2014 இற்கு பிறகு இன்று வரை இன்னும் HNDA கற்கையைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. கணக்கியல் துறையில் சிறப்பான ஆற்றல் கொண்ட இவர்களின் நிலமை கவலைக்கிடமாகவே காணப்படுகிறது.

இது தொடர்பாக மீண்டும் பட்டாதாரி ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 21.02 2019 அன்று கௌரவ மேல்மாகாண சபை உறுப்பினர் அர்சாட் நிசாம்டீன் கௌரவ மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலியை சந்தித்து இது தொடர்பாக தீர்க்கமானதும் சாதகமானதுமான ஏற்பாடுகளை எடுக்குமாறு பல விடயங்களை முன்வைத்தார்.இச் சந்திப்பில் HNDA முடித்த பட்டதாரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கௌரவ ஆளுனர் அவர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இதை தன் கவனத்தில் எடுத்து இதற்கு தீர்கமான முடிவொன்றை எடுப்பதாகவும், மீண்டும் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதமளித்தார்.

மக்கள் பிரச்சிணையை தன் பிரச்சிணையாக எடுத்து பலதரப்பட்ட சமூக சேவைகளை ஆற்றிவரும் கௌரவ மேல்மாகாண சபை உறுப்பினர் அர்சாட் நிசாம்டீன் அவர்களின் இம்முயற்சியும் பாராட்டத்தக்கது.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!!!






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.