ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில் தையல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் MLSC இற்கு Projector வழங்கும் நிகழ்வுஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து கஹட்டோவிட்ட முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட தையல் பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும் நேற்று அல்-பத்ரியா ம.வி. புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதையும் ஜனநாயக ஐக்கிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ஸுஹைல் மொஹமட் உரையாற்றுவதையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கஹட்டோவிட மத்திய குழுவின் தலைவருமான அல்ஹாஜ் M.N.M. ஜவ்ஸி J.P. ஜனநாயக ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கமால் அப்துல் நாஸர் J.P. பிரதித் தலைவரும் அல்-பத்ரியா OBA யின் உப தலைவருமான S.K.M. அஜ்மல், மு.கா. வின் அத்தனகல்ல பிரதேச சபை கஹடோவிட வட்டார வேட்பாளரும் மாஸம் Bபெஸ்ட் இன்ஜினியரிங் அன்ட் கன்ஸ்ரக்சன் (தனியார்) கம்பனியின் தலைவருமான A.H.M. அஸாம் (M.B.c) மற்றும் ஏனைய வேட்பாளர்களான ரிஷான், ரம்ஸான் உட்பட கலந்து கொண்ட ஏனையோரையும் படத்தில் காணலாம்.

அத்துடன், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் கஹடோவிட முஸ்லிம் லேடிஸ் ஸர்கள் நிறுவனத்தின் தலைவரும் பிரபல சமூகசேவையாளருமான அல்ஹாஜ் M.Z.அஹமட் முனவ்வர் J.P. அவர்களின் வேண்டுகோளிக்கிணங்க நிறுவனத்தின் நீண்டகால தேவையாகவிருந்த பொஜெக்டர் ஒன்றிணை மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களினால்  நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினரும் சிவில் இன்ஜினியருமான M.S.M. ரஜBப் அவர்களிடம் நேற்று அல்-பத்ரியா மகா வித்தியாலய புதிய கட்டிடத்தில் நடந்த நிகழ்வில் கையளிக்கப்பட்டது.தகவல் : நாஸர் JP
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here