இந்திய பொதுத்தேர்தல் ஏப்.11 - மே-19 வரை நடத்த முடிவு


-   90கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
- ஏப். 18இல்  தமிழகத்தில் பொதுத் தேர்தல்; 18சட்ட சபைகளுக்கு இடைத்தேர்தல்

இந்திய பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் திகதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மே 19ஆம் திகதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை  இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று(10)உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ல்  பொதுத்தேர்தல் நடை பெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

543  இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதி முடிகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கான  தேர்தலை நடத்தி முடிவுகள் அறிவித்து 17வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட வேண்டும். எனவே  தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான திகதியை தேர்தல் கமிஷன்  எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று  மாலை 5மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த  நிலையில் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள்  அசேக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அச்சமயம்  அவர் கூறுகையில் : 17வது மக்களவை  தேர்தலுக்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அனைத்து  மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

வேட்பாளர்  மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரையில் வாக்காளர்கள் பட்டியலில்  திருத்தம் செய்யும் பணி நடைபெறும். பல்வேறு துறைகளுடன் பேசி தேர்தலை  சுமூகமாக நடத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என சுனில் அரோரா கூறினார்.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் இருக்கும். 10இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் 17.4இலட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 1.6கோடி வாக்காளர்கள் 18ல் இருந்து 19வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும்  கடந்த ஆண்டு 9இலட்சமாக இருந்த வாக்குச் சாவடிகள் இந்த முறை 10  இலட்சமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது கிட்டத்தட்ட 8.4. கோடி  புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 90கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 11ம் திகதி - 20மாநிலங்களில் 91தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

2-ம் கட்ட வாக்குபதிவு: ஏப்ரல் 18ம் திகதி - 13மாநிலங்களில் 97தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

3ம் கட்ட வாக்குப்பதிவு:  ஏப்ரல் 23ம் திகதி 14மாநிலங்களில் 115தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

4ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29ம் திகதி 9மாநிலங்களில் 71தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது..

5ம் கட்ட வாக்குப்பதிவு:  மே 6ம் திகதி 7மாநிலங்களில் உள்ள 51தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது..

6ம் கட்ட வாக்குப்பதிவு: மே 12ம் திகதி 7மாநிலங்களில் உள்ள 59தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

7ம் கட்ட வாக்குப்பதிவு: மே 19ம் திகதி 7மாநிலங்களில் உள்ள 59தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதேவேளை, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம் திகதி இந்த இடைத்தேர்தல் நடத்தப்படும். அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய  மூன்று தொகுதிகள் தவிர, ஏனைய 18தொகுதிகளுக்கும் எதிர்வரும் 18இல் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 3தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு எதிராக வழக்குகள் இருப்பதால் இவற்றுக்கு தேர்தலை நடத்த முடியாதுள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஓ.பிஎஸ், தினகரன் அணியாக பிரிந்து பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி, தினகரன் எதிர் அணி என்று மாறியது. கட்சியும் சின்னமும் ஈபிஎஸ், ஓபிஎஸ் வசமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நிறுவினார் தினகரன். அவரது அணியை ஆதரித்த 18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அறிவித்தார். 

இதனால் சென்னை பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை உள்ளிட்ட 18தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here