சுமார் 30 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு; நாடுமுழுவதும் கல்வி நடவடிக்கை பாதிப்பு


ஏப்ரல் 22 வரை அரசுக்கு காலக்கெடு.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் நேற்று ஒருநாள் அடையாள சுகவீன லீவு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடுமுழுவதும் அநேகமான பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக அறிய வருகிறது.

இந்தப் போராட்டத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பங்கேற்றதாகவும் வேலை நிறுத்தம் வெற்றியளித்ததாகவும் லங்கா ஆசிரியர் சேவை சங்க செயலாளர் ஹிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்தனர். வடக்கு கிழக்கில் ஆசிரியர்கள் கருப்புப்பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வௌியிட்டதோடு பாடசாலை முன்பாக பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக அறிவிக்கப்படுகிறது.காணமல் போனோர் போராட்டம் காணிப்பிரச்சினை மற்றும் தமிழ் கைதிகளின் விவகாரம் என்பன காரணமாக அவர்களுக்கு சுகவீன லீவுப்போராட்டத்தில் ஈடுபடாமல் கருப்புப் பட்டி போராட்டத்தில் குதிக்குமாறு கோரியிருந்ததாக ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்ராலின் தெரிவித்தார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குதல், பெற்றோரிடம் பணம் பெறுவதை நிறுத்துதல், மாணவர்களின் ஒழுக்கத்தை பாதுகாக்கும் ஆசிரியர்களை பாதுகாத்தல் அடங்கலான கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகவீன லீவுப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 30 ற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றதாக அறிய வருகிறது. அநேகமான பாடாசாலைகளுக்கு மிகக் குறைந்தளவு அதிபர்களும் ஆசிரியர்களுமே வருகை தந்திருந்ததோடு மாணவர்கள் வருகையும் குறைவாக இருந்ததாக பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.சில பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகள் நடந்துள்ளதோடு அதிகமான பாடசாலைகளில் மாணவர்கள் முன்கூட்டி வீடுகளுக்கு அனுபப்பட்டதாக அறிய வருகிறது.
Share:

No comments:

Post a Comment