சீனாவில் இரசாயனத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததுடன்இ சுமார் 640 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தோரில் 32 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள யான்செங் நகரில் அமைந்துள்ள இரசாயன உரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே நேற்று (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றதுடன், இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலையில் தீ பரவியது. தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.  

மேலும், இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளை 2.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, சீனாவின் நிலநடுக்கம் தொடர்பான  ஆய்வு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த 640 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. அத்தோடு, 58 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் ஒரே கரும்புகை மூட்டம் காணப்படுவதாகவும், செய்திகள் தெரிவித்துள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.