இன்றைக்கு சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை்கான முன்னாள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செய்யித் ஷகீல் ஹூஸைன் அவர்களை  வானொலி நேர்காணலுக்காக சந்தித்தேன். இலங்கையை அதிகம் நேசித்த ஒரு ராஜதந்திரி. பாகிஸ்தான் இராணுவத்தில் மிகவும் உயரந்த பதவியை வகித்தவர். இலங்கை மாணவர்களின் கல்வி்க்காக தனிப்பட்ட செல்வாக்கில் அதிகளவிலான உதவிகளை வழங்கியவர். காஷ்மீர் பிரச்சினை பற்றி பாகிஸ்தானின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதன் பின்னர் இந்திய ஊடகங்கள் பற்றியும் கூறினார். "பாகிஸ்தான் இந்தியாவிடம் ஊடக யுத்தத்தில் தோல்வி கண்டிருக்கிறது" என்று கூறிவிட்டு  We have lost thousands of own people by terrorism ; so how can (they) blame us  that Pakistan is a terrorist country ?" என்று கேள்வியெழுப்பினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் முன்னாள் உயர்ஸ்தானிகரின் கருத்து நினைவில் வந்தது.  அரசியல் நிலைப்பாடுகள் ஒரு பக்கம் இருக்க இம்ரான் கான் சமரசம் செய்துகொள்வோம் என்று வலிந்து சென்றாலும் வட இந்தியாவில் இயங்கும் ஊடகங்கள் தேசப்பற்று என்று விடயத்தை முன்வைத்து போருக்குச் செல்ல வேண்டும் என்ற மனோநிலைலையை மக்கள் வலிந்து விதைத்து வருவதை காண்கின்றோம்.

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாததைப் போல அர்ணாப் கோஸ்வாமிகள் இருக்கும் வரை மோதல் தவிர்ப்பை விட எதிரியை அழிப்போம்  என்று ஊடகங்கள் கோசமிட்டுக்கொண்டே இருக்கும். இவ்வாறான விடயங்களை பிராந்தியத்தின் தோல்விகள் என்பதற்கு அப்பால் மனித குலத்தின் வீழ்ச்சியின் வடிவங்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தலைமையின் முதிர்ச்சி எந்தளவு வலிமையானது என்பதயும் உலகம் கண்டுகொண்டது.

(பஸ்ஹான் நவாஸ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.