காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் சேவை - ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் வஜிர அபேவர்தன


காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் சேவை
- ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் வஜிர  அபேவர்தன

( ஐ. ஏ. காதிர் கான் )

   பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சேவைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, இங்கு இடம்பெறும் சேவைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  காணிகளைப்  பதிவு செய்யும் ஒருநாள் துரித சேவைகளும், பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்டத்தை, காலி - காணிப் பதிவாளர் அலுவலகத்தில்  சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
   இங்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போது, எமது அரசாங்கம் மக்களுக்குப் பயன் அளிக்கும் விதத்திலான பல முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டங்களில் ஒன்றே, காணிகளை ஒரே நாளில் பதிவு செய்யும் இத்திட்டமுமாகும். இது போன்ற மக்களுக்குப் பிரயோசனம் அளிக்கும் மேலும் பல திட்டங்களையும் விரைவில் ஆரம்பிப்போம் என்றார்.( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here