அரச நிறுவனங்களின் சுற்றுப்புற சூழலில் வெற்றிலை கூறு, புகையிலை மற்றும் பாக்கு ஆகியவற்றுடன் இணைந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதனை தடுப்பதற்கான சுற்றறிக்கையொன்றினை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தின் போது சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் கொண்டுவரப்பட்ட இத்தகவல்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

வெற்றிலை கூறு, புகையிலை மற்றும் பாக்கு ஆகியவற்றுடன் இணைந்த உற்பத்திகளின் பயன்பாட்டினால் வாய் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை கவனத்திற் கொண்டு அரச நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அங்கு சேவை பெற்றுக் கொள்வதற்காக சமூகமளிக்கின்ற பொதுமக்கள் அந்நிறுவனத்தின் சூழலினுள் வெற்றிலை கூறு, புகையிலை மற்றும் பாக்கு ஆகியவற்றுடன் இணைந்த உற்பத்திகளின் பயன்பாட்டினை தடை செய்வதற்கு யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில் அரச முகாமைத்துவ சுற்றறிக்கை ஒன்றினை வெளியிடுவதற்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.