ஓகொடபொல வீதி கொங்கிரீட் இட்டு புனரமைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்   கஹட்டோவிட்ட மத்திய குழுவினதும், மத்திய குழுவின் பொருளாளர் ரம்ஸான் மாஸ்டர் மற்றும்  மாகாண சபை வேட்பாளர் M.R.M.ரிஷான்  ஆகியோரின் விஷேட  வேண்டுகோளுக்கிணங்க  SLMC யின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 16 இலட்சம் ரூபா செலவில் கொன்கிரீட்  இட்டு புனரமைக்கப்பட்ட ஓகொடபொல மத்ரஸத்துல் ஸலாம் குர்ஆன் மத்ரஸாவுக்கு முன்னாள் செல்கின்ற வீதி மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களினால் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மத்திய குழுவின் தலைவரும் மாகாண சபை வேட்பாளருமான முஸ்தாக் மதனி ஹாஜியார், மாஸ்டர் ரம்ஸான், M.R.M.ரிஷான், M.R.M.ஸரூக், ஜனநாயக ஐக்கிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ஸுஹைல் மொஹமட் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

 அத்துடன் குறித்த பாதைக்கு "மத்ரஸதுஸ் ஸலாம் மாவத்த" என்று பெயரிடப்பட்ட பதாகை மாகாண சபை உறுப்பினரால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
அத்துடன் அவரது அனுசரணையில் கண் பரிசோதனை முகாம் ஒன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.Share:

No comments:

Post a Comment