போராடி தோற்றது இலங்கை.


இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 கிரிகெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. 

இலங்கை அணி சார்பாக கமின்து மெண்டிஸ் 41 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக Phehlukwayo 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைப் பெற்றார். 

135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடிப்பெடித்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. 

இதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்ததை அடுத்து இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. 

இதன்போது தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் இலங்கை அணியால் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

அதனடிப்படையில் முதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here