ஜனாதிபதி ஊடக விருது 10 ஆம் திகதி

ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் பணிக்காகவும் அவர்களின் ஊடகப் பங்களிப்பை கௌரவிக்கும் முகமாகவும் முதலாவது ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா ஏப்ரல் 10ஆம் திகதி மாலை 4.00மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஊடகத்துறையில் சிறந்த நினைவு குறிப்பாக இந்த விழா நடைபெறவுள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர தெரிவித்தார். கொழும்பு 05நாரஹேண்பிட்டியில் அமைந்துள்ள ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (01) பகல் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா 2018 ஐ சிறப்பாக நடத்த ஊடக அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறிய அவர், ஜனாதிபதி ஊடக விருதை பெற்றுக்கொள்ள தகுதியான ஊடகவியலாளர்களை தெரிவு செய்வது முற்றிலும் சுயாதீனமான ஒரு குழுவால் சுதந்திரமாக, பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (ஸ)
Daily Ceylon 

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here