ராஜகிரியவில் இன்று முதல் புதிய போக்குவரத்து திட்டம்


ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்களுக்காக இன்று முதல் புதிய போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

அதன்படி பாராளுமன்ற வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்கள், வெலிகடை சந்தியால் கொடா வீதிக்கு திருப்பி அதனூடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளது. 

இது வரை கொழும்பு நோக்கி பயணித்த பஸ்கள் ஆயுர்வேத சந்தியால் கொடா வீதிக்குள் பிரவேசித்த நிலையில், இன்று முதல் புதிய போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. 

ஆயுர்வேத சந்திக்கு அருகில் ஏற்படுகின்ற பாரிய வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த புதிய போக்குவரத்து திட்டத்தை செயற்படுத்துவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here