காணாமற்போன (O/L) (A/L) பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது????

காணாமற்போன மற்றும் சேதமடைந்த (O/L) (A/L) பரீட்சை பெறுபேறுகளைஎவ்வாறு பெற்றுக் கொள்வது????

கொழும்பு , பத்தரமுல்லையிலுள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கருமபீடம் வேலை நாட்களில் மு.ப. 9.00 – பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும். ஒரே நாள் சேவை மற்றும் சாதாரண சேவை என இரு விதமாக சேவைகள் வழங்கப்படுகின்றன.

#ஒரே நாள் சேவை-
கட்டணம் ரூ. 600.00 மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 300.00
#சாதாரண சேவை-
கட்டணம் ரூ. 350.00 மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 200.00

#கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்-
1. பாடசாலை பரீட்சாத்தி பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்திய கடிதம் ( தோற்றிய வருடம், சுட்டெண், அடையாள அட்டை உறுதிப்படுத்தப்பட வேண்டும்)

2. தனிப்பட்ட பரீட்சாத்தியாக பரீட்சைக்கு தோற்றி இருப்பின் பரீட்சை சுட்டெண், அடையாள அட்டை , கிராம அலுவலரின் உறுதிப்படுத்திய கடிதம்

3. தனிப்பட்ட பரீட்சாத்திகள் சுட்டெண் மறந்தால் பிரச்சனை இல்லை... அடையாள அட்டை பரீட்சைக்கு தோற்றிய ஆண்டு குறிப்பிட்டால் போதும்.

Thanks:- Face Book
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here