தேர்தல் ஒன்று வந்தால், முஸ்லிம்கள் யு.என்.பி.க்கு பாய்ந்து பாய்ந்து வாக்களிக்கிறார்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை.....!

கட்டார் மற்றும் பாகிஸ்தானுக்கு தான் மேற்கொண்ட பயணங்களை தடுத்துநிறுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயன்றதாக, குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியே முஸ்லிம்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றின் போதே இவ்வாறு தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

பிரதமர் ரணில் இதுகாலவரைக்கும், எந்தவொரு முஸ்லிம் நாட்டுக்கும் பயணம் மேற்கொண்டதில்லை. நான் கட்டார் மற்றும் பாகிஸ்தானுக்கு  பயணம் மேற்கொள்ள தயாரானபோது அங்கு செல்ல வேண்டாம் என தடுக்க முயன்றார்.

முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதற்கோ, அங்கு  பயணங்களை மேற்கொண்டு இருதரப்பு நண்மைகளை பெற்றுக்கொள்ளவோ ரணிலுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

சுதந்திரக் கட்சி ஆட்சியிலேயே, முஸ்லிம்களுக்கு அதிகளவு சலுகைகள் வழங்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு முக்கியப் பதவிகள் கூட வழங்கப்பட்டன.

ரணில் தலைமையிலான ஐ.தே.க. வாக்குகளை பெறுவதற்கான ஒரு கருவியாகவே முஸ்லிம்களை பயன்படுத்துகின்றது.

தேர்தல் ஒன்று வந்தால், முஸ்லிம்கள் யு.என்.பி.க்கு பாயந்து பாய்ந்து வாக்களிக்கிறார்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை. சுதந்திரக் கட்சி செய்த சேவைகளையும் ஐ.தே.க. செய்த சேவைகளையும் பட்டியலிட்டால் இதனை தெளிவாக புரிந்துகொள்ள முடியும் எனவும் மைத்திரிபால சிறசேன மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.