பாடசாலையில் 13 கைக் குண்டுகள் விவகாரம் ; மதுசங்க என்பவர் கைது


இன்று காலை களுத்துறை பிரதேச பதுரலிய, பாலிந்தநுவர ஆரம்ப பாடசாலை கட்டடத்திற்கு
அருகில் இருந்து 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டது அறிந்ததே.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போலீசார் 32 வயது, ஹப்பு ஆரச்சிகே பவித்ரா மதுசங்க என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை கட்டடத்திற்கு அருகில் இருந்த பொதி தொடர்பில் காவலாளி சோதனையிட்ட போதே இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு காவலாளி இது தொடர்பில் உடனடியாக பாடசாலை அதிபரிடம் அறிவித்துள்ளார்.
அதிபர், பதுரலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து இராணுவத்தினர் அங்கு குண்டுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அத்துடன் பதுரலிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த போது மேற்குறிப்பிட்ட நபர் கைதாகி உள்ளார்.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here