டெடா எனக்கு எதுவும் வேண்டாம் ; செறோனை வாங்கித்தர முடியுமா????இன்று பாடசாலை மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு இரண்டாம் தவணைக்காக ஆரம்பித்தது என்னுடைய பிள்ளைகளையும் பாடசாலைக்கு நானே அழைத்துச்சென்று பாடசாலை முடிந்தபின் அவர்களை நானே வீட்டிற்கு அழைத்துவந்தேன்.

பாடசாலைவிட்டு வீடு வரும்போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் வரும் இளையவன் இன்று வழமைக்கு மாற்றமாக மிகுந்த கவலையில் வந்தான். வரும் வழியில் நான் வீட்டிற்குத்தேவையான தளர்பாடம் ஒன்றை வாங்க காட்சிஅறை ஒன்றிற்குள் சென்றேன் அங்கே எனது இளையவனுக்கு எப்போதும் பிடிக்கும் ஓர் விளையாட்டுப்பொருள் இருந்தது அதனை காட்டி இதை வாங்கித்தரட்டுமா எனக்கேட்டேன் அதற்கு அவன் சொன்ன பதில் என் இதயத்தை ஒரு கணம் உறையவைத்தது “எனக்கு எதுவும் வேண்டாம் செறோனை வாங்கித்தர முடியுமா?” எனக்கேட்டான் என்னுடைய சக நன்பன் எதை பார்த்தாலும் அதை அப்படியே வரைவான் உங்களுடைய காரை பார்த்தால் அதை அப்படியே வரைவான் மிக நல்லவர் எனக்கு வகுப்பில் எல்லா உதவிகளையும் செய்வார் இனி யார் எனக்கு உதவி செய்வார் நான் தவறிய பாடங்களை எழுதுவதற்கு கொப்பி தருவார் என்று அழுதான் அவனுக்கு தெரிந்த பாசையில் கடந்த 21 ம் திகதி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இரத்தவெறிக் கொடூரனால் கொல்லப்ப்பட்ட தனது நன்பன் செறோனுக்காக  பிரார்ததித்தான் நான் என்னுடைய 10 வயது மகனிடம் சொன்னேன் நீ நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ் மிக நீதியாழன் இதற்குரிய தீர்ப்பை நிச்சயம் அவன் வழங்குவான் கவலைப்படாதே என்றேன்.

இப்படி எத்தனைசிறுவர்கள் இன்றைய பாடசாலை முதல் நாள் தமது பக்கத்து கதிரையில் அமர்ந்திருந்த நன்பர்களை தேடி அவர்களுக்காக கண்ணீர் சிந்தி இருப்பார்களோ.

பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here