இன்று 29.05.2019 புதன் கிழமை,  காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்றிருந்த வேளை, 8வது வாட்டுக்கு பொறுப்பான விஷேட வைத்தியர்  அவரது வாட்டினுல் வைத்து அனைவர் முன்னிலையிலும்   (தலையில் அணிந்திருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இவ்வாட்டினுல் என்னுடைய சட்டம்) என சத்தமிட்டு ஏசியுள்ளார். மனைவி வெளியே வந்துள்ளார்.

கம்பஹா வைத்தியசாலைக்கு  பல இடங்களிலும் இருந்து முஸ்லிம்கள் செல்கின்றமையால் அவர்களுக்கு தலை மறைத்து ஆடை அணிவதில் ஏற்படும் அசெளகரியங்களை தவிர்பதற்கும்  இதுபோன்ற விடயங்கள் மேலும் ஏற்படாமல் இருப்பதற்கும் சமூகத்தில் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்,
மினுவாங்கொடை

கருத்துரையிடுக

  1. வைத்தியர் தான் வைத்தியம் பாரக்கும் போது தனது Surgical Mask ஐ கழட்டும்படி கூறினால் செய்வாரா?

    இப்படியானவர்கள் எப்படி வைத்தியத் துறைக்கு வந்தார்களோ?
    அடிமட்டக் குணங்கள் மேல்மட்டத்தில், அதுவும் மருத்துவத் துறையில்! அன்னங்கள் காகங்களாகின்றன!

    பதிலளிநீக்கு
  2. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் சென்று முறைப்பாடு செய்யவேண்டும்

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.